ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;
குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார் காமராசர். அவர் தமிழக முதல்வரானபோது தமிழகத்தில் 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வியை மேலும் பரவலாக்க காமராஜரின் அரசாங்கம் 1962ஆம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. பள்ளிகளைத் திறக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு உறுதுணையாக இருந்தது. எந்த தேவையற்ற இடையூறும் அளிக்கவில்லை என்பது வரலாறு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளிகளை திறப்பது, அதனை நிர்வகிப்பது ஆகியற்றில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. இந்த சிக்கல்கள் பள்ளி நிர்வாகத்துக்கு மட்டும் சிக்கலைத் தராமல், அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் சுமையாக மாறிவிடுகிறது.;