ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்;
அண்மைகாலமாக இளவயதினர் வாகனங்கள் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் பெறும் வயதினைக் கூட எட்டாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இயக்கும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளில் 2063 விபத்துகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். நாடு முழுவதும் சிறுவர்கள் இயக்கிய வாகனங்களால் 11891 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திர மாநிலம், கர்நாடகம் குஜராத், ராஜஸ்தான் அடுத்த இடத்தில் உள்ளன. 2024இல் புணே நகரில் 17 வயதுச் சிறுவன் சொகுசு கார் ஓட்டி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ;