ஆசிரியர், ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்.;
ஒரு நிறுவனத்தில் நல்ல பொறுப்பிலிருந்த நண்பர் ஒருவர் சமீபத்தில் திடீரென இறந்துவிட்டார். நண்பரின் இறுதிசடங்கிற்கான செலவுகளை நிறுவனமே ஏற்று நடத்தியது. மறுநாள், அவரது மனைவிக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் வீட்டுக்கு நண்பர்களுடன் சென்ற போது அவர் எங்களுக்கு எதுவுமே வச்சிட்டு போகல்ல.. இனி நான் எப்படி இருப்பேன்.. என அவர் மனைவி கதறிய கதறல் உலுக்கிவிட்டது. எனக்குத் தெரியும் அவர் சேமிப்பு பழக்கம் உள்ளவர். நண்பர் மூலமாக மியூட்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வந்தார். எல்லாம் சரி. ஆனால் அவர் செய்த தவறு. தனது வரவு செலவு, முதலீடு குறித்து தன் மனைவியிடம் ஏதும் சொல்லியதில்லை. இன்றைக்கு பல ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.;