ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை. ;
இன்றைக்கு வேலையில்லா பிரச்சனை படித்த இளைஞர்களை உலுக்கியெடுக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது, தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தான் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லியிருக்கிறது அண்மையில் வெளியான அன்ஸ்டாப் என்னும் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை. தற்போது கல்லூரிகளுக்கான அட்மிஷன் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து சிந்திப்பது மிகமிக அவசியமானது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுக்க 37,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல நிறுவனங்களைச் சேர்ந்த 500 மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோரிடம் விரிவான கணக்கெடுப்பை மேற்கொண்டு, திறன் அறிக்கை 2026ஐ அன்ஸ்டாப் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. ;