ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், மதுரை;
உணவே மருந்தாக இருந்த நம் பாரம்பரிய உணவுகள் உட்கொள்ளுதலை நிராகரித்துவிட்டு நீண்ட தூரம் சென்றுவிட்டதால், இன்று 50 வயதுக்கு மேல் நிறைய பேருக்கு மருந்தே உணவாகி வருகிறது. உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிடும் நிலை மாறி, சுவைக்காகவும், பெருமைக்காகவும் சாப்பிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. பீட்சா, ஷவர்மா, மோமோஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற துரித உணவுப் பண்டங்கள் இன்றைய தலைமுறையின் விருப்பத்துக்குரிய உணவாக இருக்கிறது.;
