பேராசிரியை முனைவர் உ. அனார்கலி ;
தியா காத்திருந்தாள். தியா மட்டுமல்ல... அவளுடைய பெற்றோர், அண்ணன், சில நெருங்கிய உறவினர்களும் அவன் வருகைக்காகக் காத்திருந்தனர். வீடு பளிச்செனத் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது. பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இருக்கைகள் மட்டுமல்லாமல், தரையிலும் அழகான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. “வந்துட்டாங்க... வந்துட்டாங்க...” என்றார் வாசலில் நின்ற சங்கர் மாமா. கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். மொத்தம் ஏழு பேர். இறங்கியவர்கள் கூட்டமாக நின்றிருந்தபோது, அவன் மட்டும் தனித்துத் தெரிந்தான். ;
