ஜெ.ஜெயசித்ரா - சி. ஹர்சனி, களஞ்சிய மாலைநேர கல்வி மையம், மேலக் கோவில்பட்டி, வத்தலக்குண்டு;
நீ ஏன் பேசவே மாட்டேங்குற? ஏன் எப்போதும் அமைதியாவே இருக்க? - என் வீட்டில், பள்ளியில் என எல்லோரும் கேட்கும் கேள்வி இது. என் வகுப்பு ஆசிரியை கூட பலமுறை கேட்டிருக்கிறாள். ஆனால் எனக்கு அமைதியாக இருக்கவும், எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவும், மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவுமே பிடிக்கும். என் அமைதியை என் அறிவியல் டீச்சர்தான் முதன்முதலில் அங்கீகரித்தார். ஒரு நாள், சனிக்கிழமை எங்கள் எல்லோரையும் பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். எல்லாரும் ஒரே ஆரவாரம் செய்தனர். எனக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சனிக்கிழமை நாங்கள் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். ;
