அருள்நிதி எஸ்.பகவதி மோதிலால் ;
பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவியின் அருகில் வந்தாள் மகள் தீபா, “அப்பா, நாம எல்லோரும் இன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடப் போறோம். டேபிள் புக் செய்தாச்சு. கொஞ்சம் காஸ்டிலி ஆனாலும் ருசிக்குக் குறைவிருக்காது, மூணு பாயசம், பத்து காய்கறிகள் என தடபுடலாக இருக்கும். பேப்பரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்த ரவி, “எதுக்கு ஹோட்டல் சாப்பாடு? அம்மாவும் நீயும் சேர்ந்து வீட்டிலேயே ஒரு நல்ல விருந்து தயாரிக்கலாமே? அருகில் இருந்த மருமகன் தீபக் சிரித்துக் கொண்டே, “மாமா, அவங்களுக்கும் ஒரு மாற்றம் வேண்டாமா? இன்னைக்கு மதிய சாப்பாட்டை வெளியே முடித்து, அப்படியே ஒரு சினிமாவுக்கும் போயிட்டு வரலாம். டிக்கெட்டும் புக் செய்தாச்சு...”;
