கவிஞர் க.வானமாமலை புரவலர், பூஜைப்புரை தமிழ்ச் சங்கம் திருவனந்தபுரம்;
மலையாளப் படைப்புகளில் உணர்ச்சியையும் சமூகப் பொறுப்பையும் ஒருசேரக் கலந்தெழுதிய ஒப்பற்றக் கவிஞர் சுகதகுமாரி (1934 - 2020). கவிதை இயற்றுவதுடன் நின்றுவிடாமல், இயற்கை அழியும்போது கண்ணீர் சிந்தி, அதைப் பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடிய அபூர்வமான ஆளுமைகளில் இவரும் ஒருவர். சுகதகுமாரி 1934ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளாவில் பிறந்தார். இவரது தந்தை போதேஸ்வரன் சுதந்திரப் போராட்ட வீரராகவும் கவிஞராகவும் விளங்கியவர்; தாய் கார்த்தியாயனியம்மா சமஸ்கிருத அறிஞர். இந்தச் சூழல் இளம் வயதிலேயே அவருக்குள் கவிதை உணர்வையும் சமூகப் பொறுப்பையும் விதைத்தது.;