அருள்நிதி பகவதி மோதிலால்;
சுஜா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த மாமியார் திலகா, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது.. மூன்றாவதும் பெண் குழந்தையை பெத்திருக்கிற? நம்ம குடும்பத்துக்கு வாரிசு இல்லாம பண்ணிட்ட எல்லாம் என் தலைஎழுத்து என வார்த்தைகளால் சுட்டாள். சுஜா குழந்தையை அணைத்தவாறு, குழந்தை இல்லையே என்று எத்தனை பேர் வேதனைப்படறாங்க. நமக்கு நல்ல ஆரோக்கியமான மூன்று குழந்தைகளை ஆண்டவன் தந்திருக்கிறார். அதற்கு சந்தோஷப்படாமல் இப்படி கரிச்சு கொட்டுறேங்களே உங்களுக்கும் ஒரு மகள் இருக்காங்க. மறந்துட்டு பேசுறீங்களே என கடுமையான வார்த்தைகளை மெல்லிய குரலில் சொன்னாள்.;
