எழுத்தாளர் ப்ரியம்வதா;
தண்ணீர்ப்பானையைத் திறந்து அங்கிருந்த லோட்டாவில் முகந்து அருந்தியபோது அதைப் பார்த்தேன். என் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. வீட்டின் மூலைகளில் அது அசையும் சிறு நிழலைக் கண்டாலே நடுக்கமுறும் என்னை நண்பன் கிண்டல் செய்வான். அருவருப்பு தரும் அதன் தோலும், வெளுத்த நிறமும், உயிரற்று விழிக்கும் கண்களும் என் பரம எதிரிகள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உருட்டிய செய்தித்தாளுக்கும் துடைப்பக்கட்டைக்கும் என்கையால் பலியானவை நான்கு. ஓடிப்போய் கனமான மரக்கட்டையை எடுத்து வந்து பார்த்தால் அதைக் காணோம். தேடுதலில் கண்டடையாமல் அப்படியே விட்டுவிட்டேன். அன்றிரவு படுக்கப்போகும்போது சுவரில் ஓட்டிக்கொண்டிருந்த பெரிய பல்லியினைப் பார்த்தேன். ;
