கோ.ஜெ. சஞ்சய் ஸ்ரீ வத்சன் பேச்சு மற்றும் மொழி நோயியல் நிபுணர் கஸ்தூரிபா மருத்துவக்கல்லூரி, மங்களூரு ;
பாட்டி இறந்துவிட்டாள் என அப்பா சொன்னபோது அமெரிக்காவில் காலை 6 மணியாகியிருந்தது. உடனடியாக இந்தியா கிளம்புவதற்காக முயன்றேன். முடியவில்லை. அப்பாவும் அவசரப்படவேண்டாம் எனச் சொல்லிவிட்டார். ஒருவாரமாகிவிட்டது. மதுரை விமானநிலையத்திலிருந்து நெருக்கடியான சாலைகளைக் கடந்து வீட்டையடைந்தது கார். அப்பா வாசலிலேயே நின்றிருந்தார். மொட்டை போட்டிருந்தார். வா..வா.. பயணம் சிரமமாக இல்லையே.. என விசாரித்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றார். வரவேற்பறையில் உட்கார்ந்தேன். என் மனைவி, என் அம்மாவுடன் வீட்டுக்குல் சென்றாள். ;
