எஸ்.கோபாலகிருஷ்ணன் சென்னை;
விகாஸ் அப்பார்ட்மெண்ட் ஃபிளாட்டின் பால்கனியிலிருந்து காலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். ஐந்தாறு ஏக்கர் பரப்பில் பசுமையான பெரிய மனை. காலியாகக் கிடந்த அந்த மனையில் மழையின் தயவால் புல், சிறுசிறு செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. பசுக்கள், செம்மறியாடுகள், வித விதமான பறவைகள் அங்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தன. வரும் மாடுகளும், ஆடுகளும் தேமேன்னு அதுபாட்டுக்கு மேய்ந்து கொண்டிருக்கும். விலங்கினங்கள் மேய்வதை பார்த்துக்கொண்டிருப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று.;
