முனைவர் கவிதா சந்திரபோஸ் உதவிப்பேராசிரியர் வணிக நிர்வாகவியல் ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி (த), மதுரை.;
மாணவியர் பாதுகாப்பில் கவனம் செலுத்திட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு தளத்திலும் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவியர் கடந்த மாதம் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மேலும் சில மாணவியர்.. பாதுகாப்பு என்பது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறாள் எனச் சொல்வது அல்ல. அதுபோல பாதுகாப்பு என்கிறபோது அது பயத்தை உருவாக்குவதாக இருக்கக்கூடாது. ஒரு மாணவி பாதுகாப்பாக உணரும்போது மட்டுமே அவள் தனது கல்வியையும் திறமைகளையும் முழுமையாக வெளிப்படுத்த முடியும். ;
