கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்;
தாத்தா..This is too much. நீங்க ஏன் காலையில இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சீங்க ஓஹோ!! நீ தாமதாய் எழுந்திருச்சுட்டு எங்கிட்ட சண்டைக்கு வர்றியா. ஆமா நேத்து ஞாயிற்றுக்கிழமைதானே. மதியம் நல்லா தூங்கியிருப்பாய். இருந்தாலும் இப்ப காலையில் ஏன் லேட்டா எந்திருச்சு வர்ற. நேத்து மத்தியானம் எங்க தூங்க விட்டாங்க.. ஒரே கார் சத்தம், பைக் சத்தம், பக்கத்துவீட்டு பில்டிங் வேலை சத்தம். பேசாம ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கூல் வக்கச் சொல்லணும். கிளாஸ்லதான் நல்லா தூக்கம் வருது. நேத்து மத்தியானம் நல்லாவே தூங்கலை தாத்தா. அதுசரிதான். சத்தமே வரக்கூடாது என்றால் உனக்கு பின்லாந்து நாட்டிலுள்ள பாதுகாப்பு அரணுக்குள்தான் இடம் பிடிக்க வேண்டும். ;
