என். அண்ணாமலை வாசிப்போர் இயக்கம்.;
இந்தியப் பிரதமர் என்றதும் நமது நினைவுக்கு வருவது நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய், நரேந்திர மோடி பெயர்கள்தான் நம் கண்முன் வந்து செல்லும். ஆனால், இந்த நாட்டின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் தற்காலிக பிரதமராக பணியாற்றியும், தன் வாழ்நாள் முழுவதையும் ஒரு சாதாரண வாடகை வீட்டிலேயே கழித்த குல்சாரி லால் நந்தாவை பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி, பிரிக்கப்படாத பஞ்சாபின் சியால்கோட் நகரில் பிறந்தார். லாகூர், ஆக்ரா மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களில் தனது கல்வியை நிறைவு செய்தார். இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.;
