ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;
என்ன நைநா.. டம்ளரில் கலங்கலான நீர் வைத்திருக்கிறீங்க.. டம்ளருக்குள் எட்டிப்பார்த்துக் கேட்டார் மைனா. இது மிளகுத் தண்ணீர். கருப்பு மிளகை மிதமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடித்து அதை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் சேர்த்து ருசிக்காக சிறிது உப்பும் சேர்த்திருக்கிறேன். மிதமான சூட்டில் குடிக்கும்போது இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் கருப்பு மிளகில் புற்றுநோயைத் தடுக்க உதவும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிரான போராட்டத்தில் உதவும் வைட்டமின் ஏ, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற வைட்டமின்களும் உள்ளன. இது ஒரு நபரின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.;
