கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்;
கொட்டாவி விட்டபடியே “வணக்கம் தாத்தா..” என வந்தாள் பேத்தி. என்ன.. குரலில் இவ்வளவு சோர்வு.. நல்ல தூங்கலையா..? நல்லாதான் தூங்கினேன்.. அஞ்சு கனவு கண்டேன். ஆனால் என்னான்னு தெரியல.. சரி, என்ன காரணங்கிறத கண்டுபிடிச்சிடலாம். இதக் கண்டுபிடிச்சிருக்கிற ஸ்டிக்கரை தான் ஒட்டணும்.. என்ன தாத்தா சொல்றீங்க.. ஸ்டிக்கர் ஒட்றீங்களா!!! அதென்ன ஸ்டிக்கர்? அது ஒரு பொட்டா? பென்சில்வேனியா மாநில பல்கலை விஞ்ஞானிகள், ஒரு சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். முகத்தில் ஒட்டிக் கொள்ளும் சுண்டுவிரல் அளவிலான இந்த ஸ்டிக்கர் கருவியானது தோலின் அசைவு, உடல் வெப்பநிலை, வியர்வை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடும் பல வகை உணரிகளை கொண்டுள்ளது. மிக மெல்லிய இந்த ஸ்டிக்கரை, முகத்தில் ஒட்டினால், தோலின் மாற்றங்களை கண்காணித்து, இந்தத் தரவை வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு செயலிக்கு அனுப்பிவிடும். பின்னர், ஏ.ஐ. , செயலி, நோயாளியின் தோல் மாற்றங்களை அலசி, மகிழ்ச்சி, பயம், வருத்தம், அல்லது கோபம் என்று அறிந்து தெரிவித்துவிடும். ;
