பெருமாள் மைந்தன்;
மழை, வெயில் இதில் எது அதிகரித்தாலும் பாதிக்கப்படுவது விவசாயமும் விவசாயிகளும்தான். வெள்ளத்தாலும் வறட்சியாலும் இதுவரை பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் இப்போது வெயிலினால் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியானது. நீண்ட நேரம் வெயிலில் வேலைபார்ப்பதால் தமிழக விவசாயிகளில் கணிசமானோர் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வெளியான ஆய்வு நம்மை மிரளவைத்திருக்கிறது. உலகின் மிகப் பழைமையான (1823இல் துவங்கப்பட்டது) நம்பகமான சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட், தமிழகத்தில் 5.13 சதவிகித விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது என்கிற ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வெயிலில் நின்று வேலைபார்ப்பதால், சிறுநீரகப் பிரச்சனை வந்திருக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. ;
