சுரேஷ் காத்தான் முதுகலை பொருளியல் ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, சமுத்திராபட்டி திண்டுக்கல் மாவட்டம்;
மக்கள்தொகை என்பது வெறும் மனிதர்களின் எண்ணிக்கை தொடர்பானதல்ல, அது அவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்த அறிவியல் என்பார்கள். உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட முகமை ஹிழிஞிறி, 1989 லிருந்து இந்த நாளை உலக மக்கள்தொகை நாளாக அனுசரித்து வருகிறது. இந்த நாளில்தான் உலக மக்கள்தொகை 500 கோடியைத் தொட்டதாகவும், எனவே இது ஒரு முக்கியமான நாள் எனவும் இந்தியாவின் புகழ்பெற்ற புள்ளியியலாளர் ரி.சி. சக்காரியா விடுத்த வேண்டுகோளை ஏற்று ஹிழிஞிறி அறிவித்தது.;
