நா. ஜானகிராமன் திட்டத்தலைவர், தானம் அறக்கட்டளை;
இருளுக்கு எதிர்ச்சொல் என்ன என்று கேட்டால் நாம் உடனே வெளிச்சம் அல்லது ஒளி என்று கூறிவிடுவோம். அதே போல இரவுக்கு எதிர்ச்சொல், பகல், தோல்விக்கு எதிர்ச்சொல் வெற்றி, துன்பத்துக்கு எதிர்ச்சொல் மகிழ்ச்சி என்று எளிதாக கூறிவிட முடியும். இதே போல, வறுமைக்கு எதிர்ச்சொல் என்ன என்று சொல்லுங்க பார்ப்போம். வறுமைக்கு எதிர்ச்சொல்லாக நிதி வசதி, வளம், பொருளாதார முன்னேற்றம் என்று பல பதில்கள் வரும். இந்த பதில்கள் எல்லாம் ஓரளவுக்குச் சரி தான் என்றாலும் இவை மிகச்சரியான, பொருத்தமான பதில்கள் அல்ல. உண்மையில் வறுமைக்கு எதிர்ச்சொல், “நீதி” என்று கூறவேண்டும். சமூக அநீதியே வறுமை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமகால வளர்ச்சி சிந்தனையாளரான ஜான் ஆம்ப்லர் குறிப்பிடுகிறார். வறுமை என்பது மனிதன் ஏற்படுத்திய மிக மோசமான சமூக நோய்மை.;
