முனைவர் சூரியகாந்தி, மனையியல் துறை பேராசிரியர், (பணி நிறைவு) காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்;
வரதட்சணை என்னும் கொடூரம் இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை என்பதற்குத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலையும், திருமணமாகி நான்கு நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட சென்னை லோகேஷ்வரியும் அண்மை சாட்சிகள். வரதட்சணை கொடுமை தொடர்பான நிகழ்வுகள் நாடு முழுவதும் நச்சுக்காற்றாய் வியாபித்திருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் 32.4 சதவிகிதம் வரதட்சனை தொடர்பானது என்று இந்தியாவின் குற்ற தகவலகம் கூறுகிறது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 பெண்கள் வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கொல்லப்படுகின்றனர் அல்லது தற்கொலை செய்துகொள்கின்றனர்.;
