குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை.;
டிசம்பர் மாதம் வந்து விட்டாலே பருவமழையில் நனைந்து தோய்ந்த நிலங்களிலெல்லாம் குளிர் துளிர் விடத் தொடங்கும். பள்ளிக் குழந்தைகள் வரும் கோடை விடுமுறையை எண்ணத் தொடங்கி விடுவார்கள். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் நான்கு மாதங்களில் வரவிருக்கும் பள்ளி இறுதித் தேர்வு பயத்தில் கொஞ்சம் சிரத்தையோடு படிக்க ஆரம்பித்திருப்பர். பெண்கள் கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வது பற்றி மனதில் பல திட்டங்களை தீட்டத் தொடங்குவர். ஏழை பிள்ளைகள் சிலர் கோடை விடுமுறையில் என்ன தொழில் செய்து தன் பெற்றோருக்கு துணையாய் இருக்கலாம் என சிந்திப்பர். ;
