ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;
நைநா இரவில் நீங்கள் உணவு உட்கொள்வதில்லை என உங்கள் சிஷ்யர் சொன்னார். என்ன விஷயம்? எனக்கெல்லாம் இரவில் சாப்பிடாமல் தூக்கமே வராதே நான் பட்டினியாகத் தூங்கவில்லை. வயிறை கொஞ்சம் காலியாக விட்டுவிடுகிறேன். அதாவது, சாப்பிட்டு முடித்தப் பிறகு கூடுதலாக கொஞ்சம் சாப்பிடலாம் என தோன்ற வேண்டும். வயிற்றை கொஞ்சம் காலியாக விடுவதன் மூலம், நாம் உட்கொள்ளும் கலோரியின் அளவு சற்று குறையும். உடலில் போதுமான கலோரிகள் இல்லாதபோது, நாள் முழுக்க நாம் சேமித்து வைத்த கொழுப்பிலிருந்து கலோரிகள் தங்களுக்கு தேவையான ஆற்றல் சக்தியைப் பெறத் தொடங்கும். இதன்மூலம், உடலிலுள்ள கொழுப்புச்சத்துக்கள் ஆற்றலாக மாறத்தொடங்கும். ;
