ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை.;
என்ன நைநா.. தட்டு நிறைய பப்பாளிப்பழத் துண்டுகள்..? எல்லாம் ஆரோக்கியம் கருதித்தான். சொல்லப்போனால் பழங்களிலேயே வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய மிகவும் விலைக்குறைவான பழம் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்து உள்ளன. அதோடு இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இந்த பழத்தை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் புற்றுநோயின் அபாயம் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும். பார்வை வலுப்பெறும். பப்பாளி கண் புரை அபாயத்தைத் தடுக்க உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செரிமானத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல் அறிகுறிகளை குறைக்கவும், தடுக்கவும் உதவுகிறது. பப்பாளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்களுள் ஒன்றாகும். மேலும் பப்பாளியில் கொழுப்பு இல்லை. நார்ச்சத்து அதிகம் உள்ளது.;
