பேரா.முனைவர் அ.இருதயராஜ் விஷூவல் கம்யூனிகேஷன் துறை, லயோலா கல்லூரி, சென்னை. ;
சர்வதேச அளவில் நடைபெறும் போர்களினால் (ரஷ்யா-உக்ரேன், இஸ்ரேயல்-பாலஸ்தீனம், அமெரிக்கா-ஈரான், இஸ்ரேயல்-லெபனான்) மனித சமூகம் மிகக்கொடூரமான நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. போர்கள் வெறும் நில எல்லைகளையும், அரசியல் அதிகாரத்தையும் மட்டுமல்லாமல், மனிதர்களின் வாழ்வாதாரம், அடையாளம், பாதுகாப்பு ஆகியவற்றையும் சிதைத்து, நொறுக்கி விடுகின்றன. இந்தச் சூழலில் உருவாகும் மிகப்பெரிய மனிதாபிமானப் பிரச்சனை புலம்பெயர்வு ஆகும். உயிர் பிழைப்பதற்காக தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களே புலம்பெயர்ந்தோர் ஆவர். இவர்களின் துயரமிக்க வாழ்க்கையில் சந்திக்கின்ற சவால்கள் பல அடுக்குகளைக் கொண்டவை; சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆகிய தளங்களில் இவை தீவிரமாக வெளிப்படுகின்றன.;
