சி.ராமலெட்சுமி உதவி இயக்குநர் ஓய்வு முன்னாள் படைவீரர் நலன்;
நாடுகளுக்கிடையேயானப் போர்கள் குறித்தும், அது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் செய்திகளையும் விடியோ காட்சிகளையும் தொலைக்காட்சிகள் அன்றாடம் ஒளிபரப்பி நம்மை பதறவைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருநாடும் தங்கள் தேசத்தின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளன. கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வலியச் சென்று போர் என்னும் வட்டத்துக்குள் நுழைவதில்லை. அதேநேரத்தில் எட்டிப்பார்க்கும் வன்முறையையும் போர்களையும் துணிச்சலாக எதிர்கொள்ளும். தேசப் பாதுகாப்புக்கு இந்தியாவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ;
