ப.திருமலை ஆசிரியர், பட்டறிவுப் பதிப்பகம், மதுரை.;
என்ன நைநா சோகத்துடன் இருக்கிறீர்கள்..? வேறொன்றுமில்லை. அகமதாபாத் விமானவிபத்து நெஞ்சைப் பிசைகிறது. சம்பந்தமே இல்லாமல் நிறையபேர் இறந்திருக்கிறார்கள். விபத்தில் ஒருவர் பிழைத்திருக்கிறார்.. தவறவிட்டவரும் தப்பித்திருக்கிறார்.. என்ன சொல்றீங்க நைநா.. போக்குவரத்து நெரிசல் காரணமாக பூமி சௌஹான் என்ற பெண்10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். அதுபோல லண்டனில் 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் ரமேஷ் விஸ்வாஸ் குமார், விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்து விட்டு சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் லண்டன் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார். விமான விபத்தில் ஒற்றை ஆளாய் உயிர் பிழைத்திருக்கிறார் ரமேஷ் விஸ்வாஸ் குமார். ;
