கு கிருஷ்ணகுமாரி, தலைவி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகளிர் பிரிவு திருவனந்தபுரம்.;
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேடல்களில் ஒன்று சுய அடையாளத்தைத் தேடுவது. நான் யார் என்ற கேள்வி மனித மனதின் அடிஆழத்தில் எப்போதும் விடையினைத் தேடிக்கொண்டிருக்கும். ஆனால் இந்தக் கேள்வி பெண்களிடம் எழும்போது, அது தனிப்பட்ட சிந்தனையாக மட்டுமல்லாமல், சமூக கட்டமைப்புக்களை எதிர்கொள்ளும் போராட்டமாகவும் மாறுகிறது. சிக்கல் பெண் தான் யார் என்பது அறியும் முன்பே அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்கள். ;
