கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்;
குட்மார்னிங் தாத்தா.. என்ன அதுக்குள்ள எழுந்திருச்சிட்டீங்களா..!! any hot news or good news? பேச்செல்லாம் நல்லா பேசு. காலையில எந்திரிக்கிற நேரமா இது? அவனவன் காலையில் எழுந்திச்சு, எட்டு வயசில சாதனை நிகழ்த்திட்டு இருக்கான் நீ தூங்கிட்டு இருக்க.. என்ன தாத்தா கிண்டர் ஜாய் சாப்பிடுற வயசுல இருக்குற பையனை சொல்லிப் பதறவைக்ககுறீங்களே..!! குழந்தை.. குழந்தையா இருக்கணும். சொல்லுங்க.. உன்னப் பதறல்லாம் வைக்கல. உண்மையைத்தான் சொல்றேன். அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளான். சுமார் நான்கு ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஏய்டன், அணுக்கரு இணைவை நிகழ்த்திய உலகின் மிக இளைய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைக்க முயற்சி செய்து வருகிறான். ;
