பேராசிரியர் முனைவர் சி. சங்கர நாராயணன் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்.;
அரசியல், அமைச்சரவை, என எவ்வளவோ விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் அவசியமான, ஜீவாதாரமான நீர் ஆதாரங்கள் குறித்துச் சிந்திக்க மறந்துபோகிறோம். இந்தியா முழுவதும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கோடைகாலமானது இந்தியாவுக்கு, வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கலாம். இந்தியா மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) உள்ளிட்ட பெரும்பாலான வானிலை முகமைகள் எச்சரித்திருக்கின்றன. இந்த ஆண்டு இயல்பை விட அதிகமான கோடை கால நாட்கள் இருக்கலாம் என்றும் வெப்ப அலை நாட்கள் அதிகரிக்கும் எனவும் கணித்துள்ளனர்.;
