டாக்டார் கதீஜா நாச்சியார் உளவியலாளர், அக்கு பஞ்சர் ஆராய்ச்சியாளர்;
தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல், வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்புதான் சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மையின் மிகச் சுருக்கமான விளக்கம்: பிறரின் நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் புரிந்துகொண்டு மதிப்பதாகும். சகிப்புத்தன்மை என்பது மனதால் முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதனின் குணம் எனச் சுருக்கமாகச் சொல்லலாம். பொறுமை, அமைதி, நிதானம் போன்றவை சகிப்புத்தன்மையோடு ஒன்றிணைந்தவை என்றாலும் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்குமிடையே சிறு வித்தியாசம் உண்டு. சூழ்நிலை காரணமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் கடைப்பிடிக்கப்படும் பொறுமை அழுத்தமாக மாறும், ஏற்றுக்கொண்ட பொறுமை சகிப்புத்தன்மையாக மாறும்.;
