பா. இராஜாகோபால் மாநில பொதுச் செயலாளர் Child Alert Alliance (CAA) (குழந்தைகள் விழிப்பூட்டல் கூட்டாண்மை) தமிழகம் மற்றும் புதுச்சேரி;
இடம்பெயர் தொழிலாளர்கள் என்பது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கோ அல்லது நாட்டுக்கோ சென்று வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கிறது. தமிழகத்தில் இன்றைக்கு பல்வேறு தொழில்களில் உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களைக் காண்கிறோம். இன்றைக்கு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கமுடிகிறது. இவர்களால் தமிழ்நாடு பெறும் வாய்ப்புகள் என்ன சிக்கல்கள் என்ன..? சீர்தூக்கி பார்க்கவேண்டியது அவசியம். வாய்ப்புகள்: தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவு செய்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் பல துறைகளில் உள்ளூர் மக்கள் செய்ய விரும்பாத வேலைகளை இடம்பெயர் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். ;
