கவிஞர் மு. முருகேசன்;
அழகனாபுரம் கிராமத்துல மதுசூதனன் பெரிய விவசாயி. நல்லவர். உழைப்பாளி, ஆனா யாராவது ஆசையா நாலு வார்த்தை பேசினால் உடனே நம்பிடுவாரு. ஊர்ல இருக்குற மற்றொரு விவசாயியான இராமசாமி, யோவ் மதுசூதனா, ஆளைப் பாத்து பழகு, விசாரிக்காம யாரையும் நம்பாதன்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. அவரு காதுலயே வாங்கல. வலிய வந்து பேசுபவங்ககிட்ட மறுத்தாப் பேசமுடியும் என ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார். பக்கத்து ஊர்ல குமாரசாமி என்கிற ஒருத்தர் இருந்தார். அந்தப் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவுகளுக்கு நன்கொடை கொடுப்பது, அன்னதானம் செய்வது, விழாக்கள் நடத்த டொனேஷன் கொடுப்பது என சுற்றுபட்டு கிராமங்களில் பிரபலமாகியிருந்தார். ;