கவிஞர் மு.முருகேசன்;
இராமசாமி காலையில் வழக்கம்போல் நாளிதழ்களில் மூழ்கியிருந்தார். காலையில் நாளிதழ் படிக்கவில்லையென்றால் அவருக்கு பொழுதுவிடிந்தது போல இருக்காது. தமிழகத்தில் கல்விநிலையங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகில் இருக்கும் 700க்கு மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்படுவதாக வந்த செய்தி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அரசு ஒரு நல்ல முடிவையெடுத்திருக்கிறது. இதுபோல படிப்படியாக பூரண மதுவிலக்குக் கொண்டு வந்தால் தமிழகம் போதையில்லாத மாநிலமாகும்.. என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டார். அந்த செய்தி ஏற்படுத்திய மகிழ்ச்சித் தாக்கம் முகத்தில் தெரிந்தது. தனது கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள இரண்டு கடைகள் காணாமல் போகும் கடைகள் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தது. நம்ம கிராமத்து இளைஞர்கள் இனி திருந்திவிடுவார்கள் என ஆறுதல்பட்டுக்கொண்டார்.;