கவிஞர் மு. முருகேசன்;
குப்புசாமி மிகவும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பேக்டரி அமைப்பதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த வசதியான நபர்களுடன் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருந்தது. ஆனால், இது குறித்து கிராமத்திலுள்ளவர்களிடமோ, நண்பர்களிடமோ அவர் மூச்சுவிடவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறம் காலியாக கிடக்கும் அந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் நடந்து கொண்டிருந்தது. வரத்துக்கால்வாய்கள் உடைந்து தண்ணீர் போகாததால் விவசாயம் இல்லாத களர் நிலமாகக் கிடக்கிறது. அதை எப்படியும் நல்ல விலைக்குத் தள்ளிவிட்டுவிடவேண்டும் என்பது குப்புசாமியின் எண்ணம். விஷயம் அரசல்புரசலாக வெளியே தெரிய இராமசாமி ஒருநாள் குப்புசாமியை சந்தித்தார். என்னப்பா உன்னோட இடத்தில ஏதோ பேக்டரி வரப்போகிறது என்கிறார்களே? அப்படியா? அதற்கான அனுமதியெல்லாம் வாங்கிட்டியா..? எனக்கேட்டார்.;