கவிஞர் மு. முருகேசன்;
வாங்க இராமசாமி.. தமிழகத்தில் புதிய அரசு அமையப்போகிறது..பொறுப்புக்கு வர்றவங்க எப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறீங்க.. அதை நான் என்ன சொல்ல..? ஏற்கெனவே அவங்களுக்கு எப்படி இருக்கணும்னு தெரியும். என்றாலும் வள்ளுவர் என்ன சொல்றாருன்னா.. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு, இறை என்று வைக்கப் படும்.” என்கிறார். அப்படின்னா? இந்தக் குறளின் பொருள் என்னவென்றால், ஒரு மன்னன் நீதியுடன் ஆட்சி செய்து, தனது குடிமக்களை பாதுகாப்பாக காப்பாற்றினால், அவன் மக்களால் இறைவனாகவே மதிக்கப்படுவான் என்பதாகும். முறை என்பதற்கு என்ன பொருள் கொள்ளலாம்? முறை என்றால் நடுநிலை பிறழாத நல்ல முறைமையைக் குறிக்கும். முறை செய்தல் என்பது நீதி வழங்கும் முறையில் மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் செயல்பாடுகளிலும் நடுநிலை தவறாத ஆட்சிமுறையைக் குறிக்கும். ;