கவிஞர் மு. முருகேசன்;
இராமசாமியும் கந்தசாமியும் பக்கத்துபக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் என்பதை விட இருவரும் மிக இணக்கமான நண்பர்கள். இருவரது குடும்பமும் அன்னியோனியமாக இருந்து வந்தது. இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், படித்து வந்தனர். கந்தசாமியின் மகன் படிப்பில் கொஞ்சம் திறமையானவன். அதேபோல இராமசாமியின் மகன் விளையாட்டுகளில் முதல் மாணவராக இருந்தான். என்னதான் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தில் இருந்தாலும் பெற்றோர் மகிழ்வது படிப்பில் தங்கள் மகன் முதலிடத்தில் வரவேண்டும் என்பது தானே. அதிலும் இராமசாமியின் மனைவிக்கு தன் மகன் படிப்பில் முதலிடம் வரவேண்டும் என்ற ஆசையும் கந்தசாமி மகன் மீது பொறாமையும் இருந்தது. ஆனால் இராமசாமி தன் மகனைப் படிக்கச் சொல்வார், விளையாட்டில் வெற்றி பெற்று வந்தால் ஊக்கப்படுத்துவார். யாருடனும் தன் மகனை ஒப்பிட்டுப் பேசமாட்டார்.;