கவிஞர் மு. முருகேசன்;
இராமசாமி உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பக்கத்து வீட்டு குப்புசாமி பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க இராமசாமிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. பொறுக்கமுடியாத குப்புசாமி , இராமசாமி குறித்து அவதூறு பரப்பினார். ஆனால், தேர்தல் முடிவு இராமசாமிக்கு சாதகமாக அமைந்தது. இராமசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாக்காளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் குப்புசாமியையும் சந்திக்கத் தவறவில்லை. தேர்தல் முடிந்து சில மாதங்கள் கடந்தன. குப்புசாமியால் இராமசாமியின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அவரிடம் பேசாமலேயே இருந்தார். ஆனால், இராமசாமி கண்டுகொள்ளவில்லை. ;