கவிஞர் மு. முருகேசன்;
கோடையில வெயிலும் மழையுமா நம்மளை பாடாய் படுத்திடுச்சு பயிர் செய்யவும் முடியல்ல. விட்டுவிலகவும் முடியல்ல..தன் ஆதங்கத்தை இராமசாமியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் குப்புசாமி. இதெல்லாம் காலநிலை மாற்றத்தின் விளைவுகள். இனி இப்படித்தான் இருக்கும். நமக்கு பருவகாலம் என்பதே வரையறுக்கமுடியாததாகத் தான் இருக்கும். என்ன செய்ய நம்ம பூமியை நாமளே கெடுத்திட்டோம். அதுசரி, உன் மகன் பூமிநாதன் பிளஸ் 2 தேர்வு எழுதினானே.. முடிவுகளெல்லாம் வந்திடிச்சே. மார்கெல்லாம் எப்படி வாங்கியிருக்கான்... அவன் என்ன வாங்கினான். படிபடின்னு சொன்னால் கேட்டானா.. மொபைல் பார்க்கிறதும் பையன்களோட ஊர் சுத்தறதுமாக இருந்தான். 70 சதவிகித மார்க் தான் வாங்கியிருக்கிறான். இதுல இவனுக்கு டியூஷன் வேற வைச்சிருந்தேன். ;