கவிஞர் மு. முருகேசன்;
கோடை மழை பெய்தது. விவசாயி இராமசாமி இந்த மழையை பயன்டுத்திக் கொள்ள விரும்பினார். இது குறித்து தனது நண்பரான குப்புசாமியிடமும் கோடை உழவு செய்யலாம்னு இருக்கேன். நீயும் அவ்வாறு செய் என்றார். ஆனால் குப்புசாமியோ அதெல்லம் பணம் வேஸ்ட். நேரடியாக விவசாயம் செய்யும்போது பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார். ஆனால் இராமசாமி விடாமல், இல்லப்பா கோடை காலத்தில் பொழியும் மழைநீரை மண்ணுக்குள் செலுத்த கோடை உழவு உதவுகிறது. நீர் மண்ணுக்குள் இறங்கும் போது அடிமண்ணின் ஈரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு மண், வளமுடன் காணப்படும். மண்ணுக்குள் காற்றோட்டம் அதிகமாகி மண்ணில் நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண் வளமாகிறது. எனவே விவசாயிகளான நாம் நிலத்தை கோடையில் உழவு செய்வதை தவற விடக்கூடாது என்றார். ஆனால் குப்புசாமியோ விடாமல், இதற்கு அறிவியல்ரீதியாக ஏதாவது விளக்கம் உண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.;