எழுத்தாளர் வசந்தா பாபாராஜ்;
அந்தக் கிராமத்து ஏழை விவசாயின் மகன் தமிழரசன். பெற்றோர் அரும்பாடுபட்டு எப்படியோ படிக்கவைத்தனர். படிப்பு முடிந்து பட்டம் வாங்க கல்லூரிக்குப் பெற்றோரை அழைத்துச் சென்றான். தன் மகன் பட்டம் வாங்குவதைப் பார்த்து பூரித்துப் போனார்கள் பெற்றோர். இனி தன் ஏழ்மை நிலை மாறிவிடும் என மனதுக்குள் மகிழ்ந்தார் தந்தை. பட்டம் வாங்கினால் உடனே வேலை கிடைத்துவிடும் என்பது அந்த அப்பாவி விவசாயியின் நம்பிக்கை.;
