கவிஞர் மு.முருகேசன் ;
பக்கத்து ஊரில் நவீன அரிசி ஆலை திறந்தார்கள். அதையடுத்து, அந்த நவீன அரிசி ஆலையின் முகவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று, தங்கள் ஆலையில் தொடர்ந்து நெல் அரவை நடைபெறவுள்ளது என்றும் எனவே கிராமத்தில் விளையும் நெல்மூட்டைகளை தங்கள் அரவை ஆலைக்கு அனுப்பிவைக்குமாறும், நெல்மூடைகளை அரவை ஆலைக்கு எடுத்து வர ஆகும் செலவை தாங்களே கொடுப்பதாகவும் விவசாயிகளிடம் தெரிவித்தார்கள். இராமசாமி அந்த கிராமத்தின் சிறந்த விவசாயிகளில் ஒருவர். அதுபோல எதிர்வீட்டில் இருக்கும் அவரது நண்பர் குப்புசாமியும் ஒரு விவசாயி. ;