கவிஞர் மு. முருகேசன் ;
தன் பிள்ளைகள் நகரத்தில் படித்து முடித்து வந்துவிட்டதால் கிராமத்தில் வீட்டினை கொஞ்சம் பெரிதாக்க விரும்பினார் இராமசாமி. கிராமத்தின் துவக்கத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டத் திட்டமிட்டார். கிராமத்தின் துவக்கத்தில் வீடு கட்டினால் விரைந்து நகருக்குச் செல்ல வசதியாக இருக்கும். அத்தோடு, அந்த இடத்திலிருந்து சில அடி தொலைவிலேயே நான்கு வழிச்சாலையும் வந்துவிடுவதால் வீடுகட்ட அந்த இடத்தைத் தேர்வு செய்தார். வீடு கட்டுவதற்காக உள்ளாட்சி அனுமதி, மின்சார வாரியத்திற்குக் கடிதம் என அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினார். ஒரு நாள் அவரை சந்தித்த அவரது நண்பர் குப்புசாமி, என்ன இராமசாமி, புதுசா வீடுகட்டற போல இருக்கு.. என விசாரித்தார். ஆமா.. பிள்ளைங்க படிச்சு முடிச்சு வந்துட்டாங்க. பொண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். அதனால வீடு பெருசாகக் கட்டலாம்னு இருக்கேன். வீட்டுக்கான வரைபடமெல்லாம் தயாரிச்சு, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறேன். வந்தவுடன் வேலையை ஆரம்பிக்கவேண்டும்.. என்றார்;