கவிஞர் மு.முருகேசன்;
இராமசாமி இளமையிலேயே நல்லொழுக்கத்தைப் பேணி வருபவர். அத்தோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பவர். தினமும் தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்துவிட்டுதான் வெளியே கிளம்புவார். அவர் தினமும் சுற்றும் கர்லாகட்டையை வீட்டிலுள்ள சிறுசுகளால் அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அதைப் பார்த்து அவர் சிரித்துக் கொள்வார். இராமசாமி வயல் வேலைகளைப் பார்வையிட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்க வயல்களுக்கு தண்ணீர் வருவதில சுணக்கம் இருக்கு. நாங்களும் போராடிப் பார்த்துட்டோம் ஒண்ணும் நடக்கல்ல. இனிப் பிரச்சனைதான் ஊர் பெரியவரான உங்கக்கிட்ட சொல்லிட்டுத்தான் அடுத்தது செய்யணும்னு சொல்லவந்தோம் எனக் கோபமாகப் பேசினர்.;