கவிஞர் மதுமிதா ;
ஓடிவந்த புதுமழை நீர்நிறைந்த குளத்தில் துணிகளைத் துவைத்துவிட்டு பெண்கள் முன் நீச்சல் முங்கு நீச்சல் மல்லாந்த நீச்சல் என்று வெகு தூரம் வரை நீந்திச் சென்று மகிழ்ந்து குளிப்பார்கள் மூன்று வயது குழந்தையிலிருந்தே இடுப்பளவு நீர் இருக்கும் இடத்தில் நீச்சல் பழகுவார்கள் குடிக்க சமைக்க நீரை குடங்களில் வீட்டுக்கு எடுத்துவருவார்கள் பாலத்தின் மேல் பெரும் ஓலத்துடன் புரளும் நீர்ப்பெருக்கின் அழகைக் கண்டு மகிழ பேரதிசயத்தைக் காணும் ஆர்வத்துடன் தெரு தெருவாக, குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் தோழிகளாக இணைந்து வரும் திருவிழாக்கோலமாக இருக்கும் அந்த நாட்கள்..;
