ஞா. ஜேம்ஸ் சாமுவேல்;
தோல்வி வெற்றியானது. முயற்சியும் சகிப்பும் அதை சாத்தியமாக்கியது. வெறுத்தவர்கள் நேசித்தார்கள். அன்பும் இனிய வார்த்தைகளும் அதை இணக்கமாக்கின. வதைத்த வார்த்தைகள் வருடின. பொறுமையும் புன்னகையும் இதைப் பெற்றுத் தந்தது. வேதனைகள் என்னை விட்டு விலகின. விரட்டிய சோர்வும், உற்சாகமும் இதை சொந்தமாக்கியது. குழம்பிய மனம் தெளிந்தது.. மகிழ்ந்தது. நற்சிந்தனைகள் நல்வழி காட்டின. கனவுகளும் காலந்தாழ்த்தாமல் நிஜமாகின. நியாயப்படுத்த என்னிடம் நிறைய காரணங்களிருந்தது. பிறரின் வார்த்தை அம்புகள் தைக்கவில்லை. மௌனம் மனதைப் பக்குவப்படுத்தியிருந்தது.;
