தமிழ்ச்செம்மல் ஹைக்கூ கவிஞர் இரா. இரவி;
வறுமை வாசலில் நிற்கும்.. பசி வயிற்றைப் பற்றிக்கொண்டிருக்கும். எதிர்பார்த்து எவரிடமாவது சென்றால், இல்லை என்பார்கள்.. லாயக்கில்லாதவன் என மதிப்பிடுவார்கள். ஓரங்கட்டுவார்கள்.. ஒதுக்குவார்கள். காகிதமாய் கசக்கி எறிவார்கள். ஓய்ந்து விடவேண்டாம். யோசித்துப் பாருங்கள்.. கரையைத் தொட்டு செல்லும் அலை சோர்வடைவதில்லை. வானில் வந்து செல்லும் நிலவுகூட ஒரு நாள் காணாமலும் போகும் மறுநாள் உயிர்த்தெழ தவறுவதில்லை. புதைத்த விதை மரித்துப் போவதில்லை. ஓட்டை உடைத்துக்கொண்டு மண்ணை மீறி ஒருநாள் முளைக்கும்.;
