பாவலர் க. சண்முக சிதம்பரம்;
பொங்கும் பொங்கல் பொங்கட்டும் பொய்கள் விலகி ஓடட்டும்! எங்கும் இன்பம் தங்கட்டும் ஏற்றத் தாழ்வு மறையட்டும்! உழவுத் தொழிலும் சிறக்கட்டும் உண்மை உழைப்பு வெல்லட்டும்! கழனி யாவும் செழிக்கட்டும் கதிரோன் தன்னை வணங்கட்டும்! மகிழ்ச்சி மனத்தில் பரவட்டும் மடமைத் தனங்கள் விலகட்டும்! முகிலும் ஒன்று சேரட்டும் முத்தாய் மழையும் பெய்யட்டும்!;
