முனைவர் கவிதா சந்திரபோஸ் உதவிப் பேராசிரியர், வணிக நிர்வாகவியல் துறை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (த) மதுரை;
நிகழ்காலத்தை இம்மியளவும் இழக்காதே - பின் அனைத்துக் காலங்களும் உனக்கு அன்னியமாகிப் போகும். உனக்கு உண்டான தூய வெளியை உன் லாந்தரே கண்டு கொடுக்கும். உன் பெருவிருப்பமே உனக்கான சிறுதுளி. பிறர் காட்டும் பரிவுக்கு வரம்பற்று காத்திராதே. தன்பால் நம்பிக்கை மட்டுமே வெகு நீண்ட தூரத்தையும் உனக்கு உகந்ததாகும். துவண்ட நேரங்களை வெட்டிக் கூறுபோட்டு, பிடறி பிடித்து தள்ளியவர்கள் முன் உவப்புடன் முன்னேறு. உன் மனதின் அடியாழத்தை நீயே அறிவாய். அறுவடை நாளில் நீயே உன்னை பேரளவாய் நேசிப்பாய். ஏற்ற இறக்கம் உள்ள உன் பாதைகளை சலித்தெடுத்து துயர் களைவாய்.;